TNHRCE Recruitment 2024 | Office Assistant | Librarian | Driver | Assistant Wireman Posts | 8th Pass | 10th Pass

தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை,அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்

சென்னை -4, மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் கீழ்கண்ட விவரப்படியான காலி பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தினை சார்ந்த நபர்களிடமிருந்து 27.1.2024-ஆம் தேதி மாலை 5 45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

இதர விவரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ளலாம்.

நூலகர் : 01

சம்பளம் ரூ.18500-58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் நூலக அறிவியலில் பட்டயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்-01

சம்பளம் ரூ.15900-50400

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஓட்டுநர் -01

சம்பளம் ரூ.18500-58600

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இலகுரக வாகனம் அல்லது கனரக வாகன ஓட்டுனர் உரிமமும் முதலுதவி குறித்த சான்றுகளும் பெற்றிருக்க வேண்டும்.

ஓராண்டு ஓட்டுநர் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

உதவி மின் பணியாளர்-01

சம்பளம் ரூ.16600-52400

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின் /மின் கம்பி பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மின் உரிமம் வழங்கல் வாரித்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 1.7.2023 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் மேலும் இந்து சமய அறநிலையத்துறை https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/ or https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளத்திலும் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *