மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் செயல்பட்டு வரும் இளைஞர் நீதி குழுமத்தில் புதிதாக உருவாக்கப்பட உள்ள கீழ் காணும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்தார்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Assistant cum bench clerk -01
Salary Rs.25000/-
Any Degree
Junior Assistant cum Record clerk-01
10th Pass
Salary Rs.20000/-
Office Assistant-01
8th Pass
Salary Rs.13000/-
Age limit : 18-42 Years
தேர்வு முறை:-
இப்பணியிடங்களுக்கான தேர்வு, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்டத்
தேர்வுக் குழு மூலம், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள், வயது வரம்பு, அனுபவம், ஆவண சரிபார்ப்பு மற்றும்
பிற பொதுத் தகுதி நிபந்தனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். மேலும், பணியிடத்திற்கு
தேர்வு செய்யப்பட்ட பணியாளர்கள் நியமனத்திற்கு முன் தேவையான காவல்துறை பின்னணி
சரிபார்ப்பு உள்ளிட்ட நடைமுறைகள் பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:-
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர்
அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம்
செய்து, உரிய முறையில் பூர்த்தி செய்து, கல்வி மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ்களின்
நகல்களை இணைத்து, 30.10.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ
அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புசேவைகள் துறை
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம்
பெரும் திட்ட அலுவலக வளாகம் 3ம் தளம்
மதுரை-625020
Recruitment of various post for Juvenial Justice Board
| Title | Description | Start Date | End Date | File |
|---|---|---|---|---|
| Recruitment of various post for Juvenial Justice Board | Recruitment of various post for Juvenial Justice Board | 14/10/2026 | 30/10/2026 | View (430 KB) ApplicationForm (191 KB) |