Tamil Nadu Arasu Isai Palli Velaivaipu 2024

சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருவையாறு அரசு இசை கல்லூரிகளிலும், சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலை கல்லூரிகளிலும், மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக்கலை கல்லூரியிலும், காஞ்சிபுரம் ,திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், சீர்காழி திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் செயல்படும் மாவட்ட அரசு இசைப்பள்ளிகளிலும் மற்றும் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் ஆகிய 25 இடங்களிலும் பகுதிநேர நாட்டுப்புறக் கலை பயிற்சி மையங்கள் தோற்றுவிக்கப்பட்டு ஒவ்வொரு இடத்திலும் நான்கு வகையான நாட்டுப்புற கலைகளின் ஓராண்டு சான்று பயிற்சிக்காக வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் ஆறு மணி வரை நடத்தப்பட உள்ளது.

25 நாட்டுப்புற கலை பயிற்சி மையங்களிலும், ஒரு மையத்தில் நான்கு பகுதிநேர நாட்டுப்புறக் கலை பயிற்றுநர்கள் என 100 பணியிடங்கள் மாதம் ஒன்றுக்கு 7000 ரூபாய் சம்பளத்தில் நிரப்பப்பட உள்ளன தகுதியும் திறமையும் 25 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட நாட்டுப்புற கலைஞர்கள் அல்லது தகுதியும் திறமையும் கொண்ட 50 வயதுக்கு மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் இப்பபணியிடத்திற்கு 5.1.2024க்குள் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்பிக்க வேண்டிய முகவரி, விண்ணப்பம் ஆகியவற்றை கலை பண்பாட்டு துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அடிப்படையில் துறையால் அமைக்கப்படும் தேர்வு குழுவால் தகுதி வாய்ந்த கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

https://artandculture.tn.gov.in/apply-post-folk-art-instructors-and-supervisors-part-time-folk-art%C2%A0training%C2%A0center-0

Apply for the post of Folk Art Instructors and Supervisors for Part Time Folk Art Training Center

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *