District Forest Office Recruitment 2024

திருநெல்வேலி மாவட்ட வனத்துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு வனத்துறை, தமிழ்நாடு புதுமை முயற்சி திட்டம் 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்டங்களில் முக்கியமான வன உயிரினங்களை அடையாளம் கண்டு அது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் ஒரு மையம் அமைக்கப்பட்டு வன உயிரினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

வன உயிரினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தற்காலிகமாக ஒரு உயிரியலாளர் பணியிடம் கல்வித் தகுதி: உயிரியல்/ விலங்கியல்/ உயிரியியல் தொழில்நுட்பம் ஆகிய ஏதேனும் ஒன்றில் முனைவர் பட்டம் அல்லது முதுகலை பட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் இரண்டு வருடம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஒரு தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர் பணியிடம், கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும் மற்றும் போட்டோஷாப் தெரிந்திருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதியுடைய நபர்கள் தங்களது சுயவிவரத்துடன் 10.1.2024-க்குள் திருநெல்வேலி மாவட்ட வன அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கவும்.

Applications are invited for the temporary posts in District Forest Office (PDF) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *