மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் இளைஞர் நீதிக்குழுமத்திற்கு கூடுதல் பணியிடங்களாக இளநிலை உதவியாளர் உடன் இணைந்த பதிவறை எழுத்தர் -1, அலுவலக உதவியாளர் – 1 ஆகிய பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்கண்ட பணியிடத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பமிடப்பட்ட கல்வி சான்றிதழ் நகல்கள் இணைத்து 12/10/2026 அன்று மாலை 05:30 மணிக்குள் கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களோ அல்லது முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமல்
சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
5ம்தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மயிலாடுதுறை மாவட்டம் -609 305.
Recruitment
| Title | Description | Start Date | End Date | File |
|---|---|---|---|---|
| District Child Protection Unit | Application Invited for the Post of Junior Assistant cum Record Clerk / Office Assistant | 28/09/2026 | 12/10/2026 | View (395 KB) JJB 2 New posts App Format 2026 (1) (459 KB) |