Tamilnadu Govt JJ Board Recruitment 2024

சமூக பாதுகாப்பு துறையின் மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் நலக்குழு/ இளைஞர் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர் பணியிடத்தினை ஓராண்டு காலம் ஒப்பந்த அடிப்படையில் கீழ்காணும் அட்டவணைப்படி நிரப்பப்பட உள்ளது.

பதவி : உதவியாளருடன் கூடிய கணினி இயக்குபவர்

காலிப்பணியிடம்: ஒன்று

கல்வி தகுதி மற்றும் வயதுவரம்பு:

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் டிப்ளமோ /சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணியில் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை மற்றும் முதுநிலையில் தட்டச்சு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு 18-42

ஊதியம் 11916/-

மேற்காணும் தகுதி அடிப்படையில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக நிரப்பப்பட உள்ளது.

இப்பணியிடத்திற்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தேனி மாவட்ட வலைதளத்தின் மூலம் https://theni.nic.in/notice_category/recruitment/ விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி மற்றும் அனுபவம் சான்றிதழ்களின் நகலினை சுய கையொப்பமிட்டு கீழ்கண்ட முகவரிக்கு பத்திரிகை செய்தி வெளிவந்த நாளிலிருந்து 15 நாட்களுக்குள் 5.1.2024 முதல் 19.1.2024 அன்று மாலை 5:45 மணி வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Notification Click here

Notification English click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *