TNEB TNSTC Apprenticeship Training 2023

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு தொழில் பயிற்சி நிலைய வளாகத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநர் பயிற்சிக்குரிய தேர்வு முகாம் வருகிற ஏப். 10-ந் தேதி காலை 10.00 மணிக்கு தொடங்கி மாலை 5.00 மணி வரையில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் 5-க்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்கள் (தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் -TNSTC, தமிழ்நாடு மின்சார வாரியம்-TNEB, வழுதூர் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிறுவனம், தமிழ்நாடு அரசு உப்பு உற்பத்தி கழகம், தமிழ்நாடு அரசு பணிமனை) மற்றும் 50-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரடியாக தொழில் பழகுநர் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இதில் பங்கேற்க ஐ.டி.ஐ-யில் என்.சி.வி.டி,எஸ்.சி.வி.டி பயிற்சி முடித்தவர்கள் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டயம் பட்டதாரி மாணவர்கள் அனைவரும் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம்.

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *