Office Assistant Post
Salary Rs.15700-50000
Qualification : 8th Pass
விண்ணப்பத்துடன் கல்வி தகுதி, வயது, முகவரி மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவற்றிற்கான ஆவணங்களின் நகல்கள் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் பதிவு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும்.
வயதுவரம்பு 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
பொது பிரிவினருக்கு 32 வயது மிகாமலும், பிற்படுத்தப்பட்டோர் /மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 34 வயதிற்கு மிகாமலும், அருந்ததியர்/ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 37 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
புகைப்படத்தை விண்ணப்பத்தில் அதற்கான குறிப்பிட்டுள்ள இடத்தில் ஒட்ட வேண்டும்.
புகைப்படத்தின் மேல்புறம் சுயசான்றொப்பம் இடவேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தில் பின் அடித்து இணைக்கக் கூடாது.
உரிய முறையில் சுய சான்றொப்பமிட்ட தேவையான சான்றாவணங்களில் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது. முழுவதுமாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சுய விலாசம் இட்ட ரூபாய் 50 அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட உறையுடன் இவ்வலுவலகத்துக்கு பதிவு தபால் மூலமாக 28.4.2023 மாலை 5:45 மணிக்குள் கிடைக்கத்தக்க அளவில் கீழே கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நேர்காணல் மூலமாக மேற்கண்ட காலியிடம் நிரப்பப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
தஞ்சாவூர் – 613 007
விண்ணப்பதாரர்களின் அடையாள மற்றும் இருப்பிட சான்றுக்காக கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் புகைப்பட நகல்களை விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் பான் கார்டு ,வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை
Notification Click here