TNPSC Group VIIB Free Coaching

TNPSC Group VIIB coaching

 PUBLISH DATE : 12/08/2022

செ.வெ.எண்:-21/2022

நாள்:10.08.2022

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள Executive Officer, Grade-III included in Group-VII-B Services காலிப்பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர்
முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்போது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள Executive Officer, Grade-III included in Group-VII-B Services காலிப்பணியிடங்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலக வளாகத்தில் 10.08.2022 அன்று துவங்கி தொடர்ந்து நடத்தப்படுகிறது. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது, மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன.

எனவே, இக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்விற்கு தயாராகும் விண்ணப்பதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

TNPSC Group VIIB coaching Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *