TNAHD Interview Date Out!

TNAHD Recruitment Interview Date, TNAHD,TNAHD Interview date,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் 7.1.2022 முதல் 24.1.2022 வரை நடைபெற உள்ளது

புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் 7.1.2022 முதல் 24.1.2022 வரை நடைபெற உள்ளது.

கால்நடை பராமரிப்பு துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் தேர்வு

துணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட கால்நடை பண்ணை வளாகம், தொழிற்பேட்டை ( அஞ்சல்), புதுக்கோட்டை 622 004.

என்ற முகவரியில் 7.1.2022 முதல் 24.1.2022 ( 08,09,13,14,15,16,18 மற்றும் 23.01.2022 ஆகிய 8 நாட்கள் நீங்கலாக ) தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பானை தனியே அஞ்சலில் அனுப்பப்பட உள்ளது எனவும், அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பானை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் தவறாது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொள்ள விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

அழைப்பிதழ் கிடைக்கப் பெறவில்லை என்றால் அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட மண்டல இணை இயக்குனர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அதன் நகலை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது நேர்முக அழைப்பானை இல்லாதவர்கள் நேர்முக தேர்வு வளாகத்தினுள் செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கவிதா ராமு இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

TNAHD Interview date Click here

#tnahd #tnahd interview date #tnahd jobs #tnahd interview tips #tnahd recruitment 2022 interview date #tnahd recruitment #கால்நடை பராமரிப்பு உதவியாளர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *