
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கான நேர்காணலில் பங்கேற்க அழைப்பு!
கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையில், காலியாக உள்ள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
கோவை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேர்காணல் 5.1.2022 முதல் 8.1.2022 வரை நடைபெற உள்ளது.துறையின் மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.காலை, 9:30 முதல், மாலை, 5:30 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது.அதில் குறிப்பிட்டுள்ள நாளில் அழைப்பானை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அழைப்பாணை பெறாதவர்கள், தக்க ஆதாரங்களுடன் கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்துக்கு நேரில் காலை, 10:00 முதல், மாலை, 5:45 மணி வரை வந்து, நகலை பெற்றுக் கொள்ளலாம்.
TNAHD Interview Date 2022 Click here