Job Opportunity in District Social Welfare Department

மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

கரூர் மாவட்டம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் மூலம் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை தட்டச்சு செய்து 7.2.2022 பிற்பகல் 5.45 மணிக்கு மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம் , மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் மாவட்டம் எனும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனைத்து பதவிகளுக்கும் வயது வரம்பு 21 முதல் 40 வயது வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மைய நிர்வாகி : 01

மைய நிர்வாகி பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

முதுநிலை சமூகப்பணி சட்டப்படிப்பு உளவியல் வளர்ச்சிப்பணிகள் சமூகவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டதாரி பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அரசு அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர்.

மாத ஊதியம் ரூபாய் 30,000/-

வழக்கு பணியாளர் : 04

வழக்கு பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

சமூகப்பணி, சட்டப்படிப்பு, உளவியல், வளர்ச்சிப்பணிகள் சமூகவியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டதாரி/ பட்டதாரி பெண் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவராவர்.

மாத ஊதியம் ரூபாய் 15,000/-

காவலர் மற்றும் ஓட்டுநர் : 02

காவலர் மற்றும் ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். ஆண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன பாதுகாப்பு பணியில் முன் அனுபவமும் ஓட்டுநர் பணியில் முன் அனுபவமும் மற்றும் ஓட்டுநர் உரிமம் உடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மாத ஊதியம் ரூபாய் 10000/-

பல்நோக்கு உதவியாளர் : 01

பல்நோக்கு உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.சமையல், வீட்டு வேலை நன்றாக தெரிந்திருக்க வேண்டும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவராவர்.

மாத ஊதியம் ரூபாய் 6400/-

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி 7.2.2022

Job Opportunity in District Social Welfare Department Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *