TN Govt Panchayat Union Office Recruitment 2026 | BDO Recruitment 2026 – Record Clerk

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பெரம்பலூர் மாவட்டம்
அறிவிக்கை (Notification)

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில்
ஒன்றிய தலைப்பின்கீழ் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்தை
நிரப்புவதற்கான அறிவிக்கை.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய
பொதுநிதி தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் பதிவறை எழுத்தர்
நிலையில் ஏற்பட்டுள்ள SC பிரிவு குறைவு பணியிடத்தினை பூர்த்தி செய்யும்/ நிரப்பும்
பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 01.09.2026 முதல் 30.09.2026 மாலை 5.45
மணி வரை நேரிலோ / தபால் வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : பதிவறை எழுத்தர்

ஊதியம் : 15,900-58,500 (ஊதிய நிலை -2)

வயது (01.07.2026 அன்று)

1) 18-37
2) மாற்றுத்திறனாளிகள் அதிகபட்ச
வரம்பிலிருந்து 10 ஆண்டுகள்
வரை நீட்டிப்பு
3) முன்னாள் இராணுவவீரர் 18-55

மொத்த பணியிடங்கள் : 01

இன சுழற்சி விவரங்கள் : SC

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி

விண்ணப்ப கட்டணம் : ரூ.50/-

விண்ணப்பங்கள்
சமர்பிப்பதற்கான கடைசி நாள் : 30.09.2026

நிபந்தனைகள்:

  1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று,
    ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
    (இருப்பிடச் சான்று தொடர்புடைய வட்டாட்சியரிடம் பெற்று சமர்பிக்க
    வேண்டும்)
  1. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணத்தை வேப்பந்தட்டை வட்டார
    வளர்ச்சி அலுவலர்(வ.ஊ)-இன் அலுவலக Non-Salary வங்கிக்கணக்கிற்கு
    (வங்கி கணக்கு எண்.074801000026725, IFSC. IOBA0000748, இந்தியன் ஓவர்சீஸ்
    வங்கி, வேப்பந்தட்டை) செலுத்தி அதற்கான ரசீதினை விண்ணப்பத்துடன்
    இணைத்து சமர்பிக்க வேண்டும்.
  1. வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும்
    விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும் தகுதியான நபர்களுக்கு மட்டும்
    நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.
  1. மேற்படி காலிப்பணியிடத்திற்கான விண்ணப்ப படிவம் https://perambalur.nic.in
    என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணையதளத்தில்
    பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பின்வரும்
    முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.09.2026 மாலை 5.45
    மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
    ஆணையர் /
    வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி),
    ஊராட்சி ஒன்றியம், வேப்பந்தட்டை – 621 116.
    பெரம்பலூர் மாவட்டம்.
  1. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத
    விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  2. காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும்
    பரிசீலிக்கப்படமாட்டாது.
  3. எந்தவொரு விண்ணப்பத்தினையும் நிராகரிக்கும் அதிகாரம் நியமன
    அலுவலருக்கு உண்டு.
  4. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள்
    மற்றும் நேரம் குறித்த விபரங்கள் நேர்காணல் கடிதம் (Call Letter) மூலம் தனியே
    அனுப்பி வைக்கப்படும்.

Recruitment

TitleDescriptionStart DateEnd DateFile
Recruitment Notification – Veppanthattai Panchayat Union,Perambalur DistrictNotification for Filling up the Vacant Record Clerk Post in Veppanthattai Panchayat Union, Perambalur District01/09/202630/09/2026View (2 MB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *