சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆர்.சி.எம் நிதி உதவி உயர்நிலைப்பள்ளி உதயேந்திரம் பள்ளியில் சமையல் உதவியாளர் ஒரு காலி பணியிடத்திற்கு நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளது.
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும் அவ்வாறு பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு முதலில் ரூபாய் 3000 தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
ஓராண்டு கால பணிக்கு பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் ஊதிய நிலை ஒன்று லெவல் ஆப் ரூபாய் 3000-9000 வழங்கப்படும்.
இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
வயது நிர்ணயம் இதர தகுதிகள் அனைத்தும் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும்.
வயது வரம்பு:-
21 முதல் 40 வரை (பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்)
18 முதல் 40 வரை (பழங்குடியினர்)
20 முதல் 40 வரை விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்
குறைந்தபட்ச கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தோல்வி/ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தமிழில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.
நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் இடைப்பட்ட தூரம் மூன்று கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.
ஊராட்சி- குக்கிராமம்- வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய மாதனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 6.5.2025 முதல் 15.5.2025 மாலை 5 45 மணிக்குள் அளிக்கப்படல் வேண்டும்.
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
Application for the Vacant Post of Cooking Assistant in Nutrition Centers | Application for the Vacant Post of Cooking Assistant in Nutrition Centers | 06/05/2025 | 15/05/2025 | View (3 MB) |
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் | சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் | 06/05/2025 | 15/05/2025 | பார்க்க (3 MB) |