TNSRLM Recruitment 2023

தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, தென்காசி மாவட்டம், வட்டார இயக்க மேலாளர் காலியிடங்களுக்கு தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள இரண்டு வட்டார இயக்க மேலாளர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விபரம் : வட்டார இயக்கம் மேலாளர் -02

வட்டார இயக்க மேலாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:-

ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எம்எஸ் ஆபீஸ் குறைந்தபட்சம் ஆறு மாத காலம் கணினி படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டு அறிவியலில் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

1.1.2023 அன்று 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகள் குறைந்தபட்ச மூன்று வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் தென்காசி மாவட்டத்திற்குள் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
ரயில் நகர், மாவட்ட ஆட்சியரகம்,
தென்காசி-627 811.

விண்ணப்பங்கள் அலுவலகத்தில் பெறுவதற்கான கடைசி நாள் 2.6.2023 தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும்.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் தகுதியானவர்கள் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர் பணி திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக ஒப்பந்த காலம் புதுப்பிக்கப்படும்.

Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *