Arulmigu Jambukeswarar Akilandeswari Temple Recruitment 2023

இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் திருவானைக்காவல் திருச்சி -வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல் அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் கீழே குறிப்பிட்ட காலி பணியிடங்களுக்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளின்படி பணி நியமனம் செய்ய 11.5.2023 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தட்டச்சர் -01

சம்பளம் ரூ.18500-58600

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி மற்றும் தட்டச்சு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

உதவி மின் பணியாளர்-01

சம்பளம் ரூ.16600-52400/-

அரசால் /அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின் கம்பிப்பணியாளர் தொழிற்பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மின் உரிமம் வழங்கல் வாரித்திடமிருந்து H சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

காவலர்-04

சம்பளம் ரூ.15900-50400

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்

பெருக்குபவர்-01

சம்பளம் ரூ.15900-50400

தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

திருக்கோயிலால் வெளிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவலகத்திலும் அல்லது www.hrce.gov.in
மற்றும் https://thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணைய தளங்களிலும் அறிந்து கொள்ளலாம் மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர் 1.7.2023 ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் பணியிட வரிசையின் மற்றும் ————————- பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்- 620005 என்ற முகவரிக்கு நேரிலோ /அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.5.2023 பிற்பகல் 5 45 மணிக்குள்

https://thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php

https://thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in/

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *