Tiruvannamalai Mahalir Thittam Block Coordinator Recruitment in Cheyyar Block

திருவண்ணாமலை மாவட்டம் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு

மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை https://tiruvannamalai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விரும்புவோர் 31.03.2023 தேதி வரை மாலை 5.00 மணிக்குள் இணை இயக்குநர் /திட்ட இயக்குநர்,தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம், திருவண்ணாமலை, வேங்கிக்கால் மற்றும் அஞ்சல் – 606 604 முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் – நியமனத்திற்கான தகுதிகள்:

செய்யார் -01

ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் ஆறு மாதம் சான்று பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சம் வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சொந்த வட்டாரத்தில் வசிப்பராக இருக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான பணிகளை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *