Oddanchatram Taluk Village Assistant Job Notification

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் காலியாக உள்ள 2 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு, தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலிப்பணிடம் உள்ள கிராமம் மற்றும் இட ஒதுக்கீடு விபரங்கள் பின்வருமாறு.

காலிப்பணியிட கிராமங்கள் விபரம்:

1) கேதையுறம்பு – முஸ்லீம் அல்லாத பிற்படுத்தப்பட்டோர்(ஆண் மற்றும் பெண்) (முன்னுரிமையற்றவர்கள்) (இட ஒதுக்கீடு முன்னாள் இராணுவத்தினர்) தமிழ்வழி கல்வி. – BC(Other than BackWard Class Muslims) (General) (Non Priority) (Reservation Ex serviceman) Tamil Medium.

2) மண்டவாடி – பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லீம் (பெண்கள் மட்டும்)(முன்னுரிமையற்றவர்கள்) (இட ஒதுக்கீடு ஆதரவற்ற விதவை) – B.C.Muslims (Women) (Non Priority) (Reservation Destitute Widow).

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது 01.07.2022 அன்று குறைந்தபட்சம் வயது 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுபிரிவினருக்கு அதிகபட்சம் வயது 32 ஆண்டுகள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு (SC, SCA, ST, BC, BC(MUSLIM), MBC, DNC) வயது 37 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

காலிப்பணியிடகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது, பணியிடம் காலியாக உள்ள கிராமம், 2 கி.மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும், தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில், காலிப்பணிடம் அமைந்துள்ள குறுவட்டம்/வட்டத்திற்குள் தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.

விண்ணப்பதாரர்கள் மிதிவிண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். காலியாக உள்ள 2 கிராம உதவியாளர் பணிடங்களுக்கான விண்ணப்பங்கள் கல்வித் தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளைக் கொண்ட நபர்கள் தகுந்த ஆவணங்களின் நகல்களுடன், தமிழக அரசின் இணையதளம் https://cra.tn.gov.in, வருவாய் நிருவாகத் துறையின் இணையதளம் (https://cra.tn.gov.in) மற்றும் திண்டுக்கல் மாவட்ட அதிகாரப்பூர்வமான இணைதளம் http://www.dindigul.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக 07.11.2022 வரை மாலை 5.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *