TN Govt Sweeper Recruitment 2022

மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் காலியாகவுள்ள 28 பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் மாதம் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.

மதுரை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் காலியாகவுள்ள 28 பகுதி நேர தூய்மைப்பணியாளர் பணியிடங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.3,000 மட்டும் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது.

பதவி காலிப்பணியிடம் தொகுப்பூதியம் அடிப்படையில், இனச்சுழற்சி முறையில் நியமிக்கப்படவுள்ளது. மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 28. இதில் ஆண்கள் 18, பெண்கள் 10 ஆகும்.

இதில் இனசுழற்சி முறையில் ஆண்கள் பிரிவில் பொது(முன்னுரிமையற்றவர்கள்)-4, பிசி(முன்னுரிமை உள்ளோர்)-1, பிசி(முன்னுரிமையற்றோர்)-2, பிசி(முஸ்லீம்-முன்னுரிமையற்றோர்)-1, எஸ்.சி(முன்னுரிமையற்றோர்)-2, எஸ்டி(முன்னுரிமை உள்ளோர்)-1, எஸ்சிஏ(முன்னுரிமை உள்ளோர்)-1, எம்பிசி/டிஎன்சி(முன்னுரிமை உள்ளோர்)-1, எம்பிசி/டிஎன்சி(முன்னுரிமையற்றோர்)-5 ஆகும்.

பெண்கள் பிரிவில், பொது(முன்னுரிமை உள்ளோர்)-1, பொது(முன்னுரிமையற்றவர்கள்)-3, பிசி(முன்னுரிமை உள்ளோர்)-1, பிசி(முன்னுரிமையற்றோர்)-2, எஸ்.சி(முன்னுரிமையற்றோர்)-2, எம்பிசி/டிஎன்சி(முன்னுரிமையற்றோர்)-1 ஆகும்.

மேற்கண்ட பகுதி நேர தூய்மைப் பணியாளர் (ஆண்/பெண்) காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம், இனச்சுழற்சியின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்காக பின்வரும் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 01.07.2022 தேதியில் எஸ்/எஸடி- 18 முதல் 37, பிசி, பிசிஎம், எம்பிசி மற்றும் டிஎன்சி – 18 முதல் 34, இதர பிரிவினர் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளில் அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

மேற்படி தகுதிகளுடன் மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்திலுள்ள கள்ளர் சீரமைப்பு விடுதிகளில் பகுதிநேர தூய்மைப்பணியாளராக (தொகுப்பூதியம்) பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் உரிய சான்றுகளின் நகல்களை விண்ணப்பத்துடன் இணைத்தும் சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போட் அளவு புகைப்படம் ஒட்டி அதனை ”இணை இயக்குநர், கள்ளர் சீரமைப்பு, மதுரை – 20” என்ற முகவரிக்கு 30.09.2022 தேதிக்குள் சமர்பிக்க வேண்டும்.

TN Govt Sweeper Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *