VAO Assistant Recruitment 2022

Nilakkottai Taluk (VAO Assistant Recruitment)

PUBLISH DATE : 22/03/2022

செ.வெ.எண்:-40/2022

நாள்:21.03.2022

திண்டுக்கல் மாவட்டம்

நிலக்கோட்டை வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் 2021 ஆண்டு காலியாக உள்ள 9 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளை கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை 05.04.2022-ம் தேதி மாலை 5.00 மணிக்குள் நிலக்கோட்டை வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட நிலக்கோட்டை வட்டாட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1. கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2. வயது 01.07.2022 அன்று அனைத்து வகுப்பினர்களுக்கும் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள், பொதுப்பிரிவினருக்கு அதிகபட்சம் 32 ஆண்டுகள், இதர வகுப்பினருக்கு அதிகப்ட்சம் 37 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

3. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதிவரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

4. காலியிட கிராமங்கள் விவரம்

1) மட்டப்பாறை – பொது பிரிவு – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்

2) சித்தர்கள்நத்தம் – BC (பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக)
(பொது) – முன்னுரிமையுள்ளவர்.

3) ஜம்புதுரைக்கோட்டை – பொது பிரிவு – (பொது) முன்னுரிமையுள்ளவர்.

4) விருவீடு – SC – (பொது) – முன்னுரிமையற்றவர்

5) மல்லணம்பட்டி – MBC/DNC – பெண்கள் மட்டும் – முன்னுரிமையற்றவர்

6) மாலையகவுண்டன்பட்டி – BC (பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம் நீங்கலாக) –
(பொது) – முன்னுரிமையற்றவர்.

7) குன்னுவாரன்கோட்டை – பொது பிரிவு – (பொது) – மாற்றுத்திறனாளி

8) கணவாய்பட்டி – SC – (பெண்கள் மட்டும்) – முன்னுரிமையற்றவர்

9) சின்னமநாயக்கன்கோட்டை – பொது பிரிவு – (பொது) – முன்னுரிமையற்றவர்

5. காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது

அ) பணியிடம் காலியாக உள்ள கிராமம்,

ஆ) 2.கி.மீ சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும்,

இ) குறுவட்ட அளவிலும்,

ஈ) தகுதியான நபர்கள் கிடைக்காத பட்சத்தில் காலிப்பணியிடம் அமைந்துள்ள நிலக்கோட்டை வட்ட அளவில் மட்டுமே தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும்.

மேலும், 2020 ஆண்டிற்கான கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கு எண்:W.M.P (MD) No.12938 ழக 2020 and 3478 of 2021- ன் படி இரத்து செய்யப்பட்டுள்ளது என நிலக்கோட்டை வட்டாட்சியர் திரு.த.தனுஸ்கோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.

VAO Assistant Recruitment 2022 Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *