Oddanchatram Taluk Village Assisstant Jobs

PUBLISH DATE : 12/04/2022

செ.வெ.எண்:-28/2022

நாள்:11.04.2022

திண்டுக்கல் மாவட்டம்

ஒட்டன்சத்திரம் வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளர்கள் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் காலியாக உள்ள 5 கிராம உதவியாளாகள் பணியிடத்திற்கு, பின்வரும் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளை கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை பத்திரிக்கை விளம்பரம் வரப்பெற்ற நாளில் இருந்து 15 தினங்களுக்குள் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியருக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.

விண்ணப்பிக்க தகுதிகள்:

கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.07.2022 அன்று குறைந்தபட்சம் வயது 21 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும். பொதுபிரிவினருக்கு அதிகபட்சம் வயது 32 ஆண்டுகள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு (SC, SCA, ST, BC, BC(MUSLIM), MBC, DNC) வயது 37 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, மேற்படி பதிவு நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.

காலிப்பணியிட கிராமங்கள் விபரம்:

1) வீரலப்பட்டி – மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சீர்மரபினர் (ஆண், மற்றும் பெண்)(முன்னுரிமையற்றவர்கள்) MBC & DNC (General) (Non Priority)

2) கேதையுறம்பு- முஸ்லீம் அல்லாத பிற்படுத்தப்பட்டோர்(ஆண் மற்றும் பெண் )(முன்னுரிமையற்றவர்கள்) (இட ஒதுக்கீடு முன்னாள் இராணுவத்தினர்)
BC(Other than BackWard Class Muslims) (General) (Non Priority)
(Reservation Ex serviceman)Tamil Medium

3) பொருர் – பொதுப்பிரிவினர் (பெண்கள் மட்டும்) (முன்னுரிமையற்றவர்கள்) GT (Women) (Non Priority)

4) மண்டவாடி – பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லீம் (பெண்கள் மட்டும்)(முன்னுரிமையற்றவர்கள்) (இட ஒதுக்கீடு ஆதரவற்ற விதவை) B.C.Muslims (Women)
(Non Priority) (Reservation Destitute Widow)

5) கூத்தம்பூண்டி – பொதுப்பிரிவினர்(ஆண் மற்றும் பெண்) (முன்னுரிமையற்றவர்கள் GT (General) (Non Priority)
காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யும் பொழுது, பணியிடம் காலியாக உள்ள கிராமம், 2 கி.மீட்டர் சுற்றளவில் அருகாமை கிராமங்கள் அளவிலும், தகுதியான நபர்கள் கிடைக்காதபட்சத்தில் காலிப்பணிடம் அமைந்துள்ள குறுவட்டத்தைச் சேர்ந்த குறுவட்ட அளவில் மட்டுமே தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்கள் பரிசீலனை செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் மிதிவிண்டி ஓட்டத் தெரிந்தருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் விண்ணப்பங்களை 15 தினங்களுக்குள் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

vao asst jobs click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *