Tamil Nadu Commercial Taxes Department Recruitment 2024 | TN Sales Tax Appellate Tribunal OA, Sweeper, Night Watch Man & Driver Recruitment 2024 Application Form

தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் சென்னை- 104

TN Sales Tax Appellate Tribunal OA, Sweeper, Night Watch Man & Driver Recruitment 2024 Application Form (Last date for applicatoin 11.11.2024 at 5.45 pm

இத்துறையில் காலியாக உள்ள ஓட்டுநர்கள், அலுவலக உதவியாளர்கள், இரவு காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் இரவுக்காவலருடன் கூடிய துப்புரவுப் பணியாளர் பதவிக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பகம் மூலம் பட்டியல் பெற்றும், தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டும் நேர்காணல் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

எனவே தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 11.11.2024 அன்று மாலை 5:45 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிட விபரம்: ஓட்டுநர்

காலி பணியிடங்கள் எண்ணிக்கை: 2

ஊதிய விகிதம் ரூ.19,500 முதல் 71,900

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டாயம் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்-18 Posts

ஊதிய விகிதம் ரூ.15700-58100/-

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இரவு காவலர்- இரண்டு

ஊதிய விகிதம் ரூ.15700-58100/-

தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

துப்புரவு பணியாளர்-இரண்டு

ஊதிய விகிதம் ரூ.15700-58100/-

தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

இரவுக்காவலருடன் கூடிய துப்புரவுப் பணியாளர்-1

ஊதிய விகிதம் ரூ.15700-58100/-

தமிழில் நன்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு 1.7.2024 அன்று உள்ளவாறு ( மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் )

பொது பிரிவினர் 18 முதல் 32 வயது

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 18 முதல் 34

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் 18 முதல் 37

ஆதரவற்ற விதவை அனைத்து பிரிவினருக்கும் 18 -37

வயது அரசு விதிகளின்படி முன்னாள் படை வீரர்களுக்கு வயது வரம்பு 53 வரை தளர்வு உண்டு.

மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் உச்ச வயது வரம்பு தளர்வு உண்டு.

பணி அளிக்கப்படும் இடம்: மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கு:- சென்னை,கோவை, மதுரை

விண்ணப்பங்கள் 11.11. 2024 அன்று மாலை 5:45 மணிக்குள் பதிவு அஞ்சல்/ விரைவு தபால் மூலமாக மட்டுமே கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

தலைவர்,
தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம்,
இரண்டாம் தளம், மாநகர உரிமையியல் நீதிமன்ற கட்டிடம்,
உயர் நீதிமன்ற வளாகம், சென்னை-104
.

விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.

ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அதற்கான சான்றிதழ் உடன் தனித்தனி விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

https://ctd.tn.gov.in/home

TN Sales Tax Appellate Tribunal OA, Sweeper, Night Watch Man & Driver Recruitment 2024 Application Form (Last date for applicatoin 11.11.2024 at 5.45 pm  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *