Employment and Training Commissionerate Chennai Office Assistant Recruitment 2023 | Notification Download | Application Form

தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம்.

சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் ஆணையரக அலுவலகத்தின் வேலைவாய்ப்பு பிரிவில் காலியாக உள்ள ஆறு அலுவலக உதவியாளர் மற்றும் இரண்டு காவலர் பணியிடங்களுக்கு சென்னை மாவட்டத்தை சார்ந்த மனுதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அலுவலக உதவியாளர் பணிக்கான கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காவலர் பணியிடத்திற்கான கல்வி தகுதி தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு

குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயதும்

உச்ச வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு

பொது பிரிவினர் 32 வயது மிகாமலும்

பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்/ பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவினர் 34 வயது மிகாமலும்,

ஆதிதிராவிட வகுப்பினர் / பழங்குடியினர் 37 வயதிற்கு 34 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.

மேலும் உரிய உடற் தகுதி சான்று அரசு மருத்துவமனையின் உதவி அறுவை சிகிச்சை மருத்துவர் அவரிடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.

தகுதியுடைய மனுதாரர்கள் உரிய விண்ணப்பத்தை 9.8.2023 முதல் 29.8.2023 வரையிலான அரசு பணி நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட முகவரியிலிருந்து பெற்று அதனை முறையாக நிரப்பி பதிவு அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

துணை இயக்குநர் (நிர்வாகம்), வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகம் (வேலை வாய்ப்பு பிரிவு), எண். 42 ஆலந்தூர் ரோடு,திரு வி க தொழிற்பேட்டை , கிண்டி, சென்னை-600 032

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள் 30.8.2023 மாலை 5 மணி வரை

Notification click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *