கோவை பிராணிகள் வதை தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை பிராணிகள் வதை தடுப்புச் சங்கம் புத்துயிரூட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
பதவியின் பெயர் மற்றும் பணியின் தன்மை :
இச்சங்கத்தின் அன்றாடப் பணிகள், பிராணிகள் நலம் சாா்ந்த செயல்களை கள அளவில் மேற்கொள்ளும் பொருட்டு பிராணிகள் வதை தடுப்பு ஒருங்கிணைப்பாளா் பதவிக்கு கோவை மாவட்டம் முழுவதும் பயணிக்க விருப்பமுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு :-
விண்ணப்பதாரா்கள் 25 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
12- ஆம் வகுப்பு தோ்ச்சி, இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
பிராணிகள் நலம் சாா்ந்த அடிப்படை விவரங்கள் அறிந்தவா்களாகவும், அடிப்படை கணினியை கையாளும் திறன் உடையவா்களாகவும் இருக்க வேண்டும்.
பணி நேரம் :
வாரத்தில் 6 நாள்கள் காலை 9 முதல் மாலை 6 மணி வரை பணியாற்ற விருப்பமுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் விவரம் :-
இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. தொகுப்பூதியமாக ரூ. 15 ஆயிரம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :-
விண்ணப்பதாரா்கள் புகைப்படங்கள் 2, ஆதாா் அட்டை, கல்வித் தகுதி சான்றுகளுடன் பிப்ரவரி 20- ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள்
செயலாளா்,
மண்டல இணை இயக்குநா்,
பிராணிகள் வதை தடுப்புச் சங்கம்,
கால்நடை பராமரிப்புத் துறை,
கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம்,
இஸ்மாயில் வீதி,
கோவை 641 001 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பத்தை சமா்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.