Recruitment of Jeep Driver Panchayat Union Kanai

தமிழ்நாடு அரசு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியம் ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்.

விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி ஒன்றிய தரப்பு ஈப்பு ஓட்டுநர் நிலையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்: ஈப்பு ஓட்டுநர்

பணியின் தன்மை: உயர் அலுவலர்கள் திட்ட பணிகளை ஆய்வு செய்ய வெளிச்செல்லும்போதும் ஈப்பு ஓட்டும் பணி

ஊதியம் ரூ.19500-62000

மொத்த காலி பணியிடங்கள் : 1

கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதிகள்: செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.

சுய முகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூபாய் 30 ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -01 இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், காணை, விழுப்புரம் மாவட்டம் 605 301 என்ற முகவரிக்கு 24/11/2023 மாலை 5:45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.

ஈப்பு ஓட்டுநர் காலி பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் விழுப்புரம் மாவட்டத்திற்கான https://viluppuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு அறிவிப்பு பெற இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *