தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம்
இரவுக் காவலர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமனம்
விருதுநகர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள ஒரு இரவுக் காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : இரவுக் காவலர்
ஊதியம் ரூ.15700-50000
வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது
SC/ST/SCA : 37
மொத்த காலி பணியிடங்கள் : 01
கல்வித்தகுதி : தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 26.11.2023
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவஞ்சல் மூலமாக அல்லது நேரடியாகவோ 6.11.2023 முதல் 26.11.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் ஆணையாளர் , ஊராட்சி ஒன்றியம், சிவகாசி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இரவுக் காவலர் காலி பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் விருதுநகர் மாவட்டத்திற்கான https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அல்லது https://cdn.s3waas.gov.in/s3c86a7ee3d8ef0b551ed58e354a836f2b/uploads/2023/11/2023110235.pdf என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
Notification click here