தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள இரண்டு வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் 16 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால் தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வட்டார இயக்க மேலாளர் காலிட விவரம் 2
வட்டார ஒருங்கிணைப்பாளர் 16
ஆலங்குளம்-2
கடையம்-2
கீழப்பாவூர்-2
செங்கோட்டை-3
வாசுதேவநல்லூர்-2
கடையநல்லூர்-1
மேலநீலிதநல்லூர்-1
சங்கரன்கோவில்-3
வட்டார இயக்க மேலாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் எம்எஸ் ஆபீஸ் குறைந்தபட்சம் 6 மாத காலம் கணினி படித்ததற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டு அறிவியலில் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் தென்காசி மாவட்டத்திற்குள் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதிகள்:
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் எம்எஸ் ஆபீஸில் குறைந்தபட்ச 3 மாத காலம் கணினி படித்ததற்கான சான்றித பெற்றிருக்க வேண்டும்.
28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்ட செயல்பாடுகளில் குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் சம்பந்தப்பட்ட வட்டாரத்திற்குள் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
மாவட்ட ஆட்சியரகம்
தென்காசி – 627 811
விண்ணப்பம் அலுவலகத்தில் பெறுவதற்கான கடைசி நாள் 15.02.2023
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வு நடத்தப்படும்.
எழுத்து தேர்வு தேர்ச்சி பெறுபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படும் தகுதியானவர்கள் ஒரு வருட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி ஈடுபடுத்தப்படுவர்.
பணித்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பாக ஒப்பந்த காலம் புதுப்பிக்கப்படும்.
எனவே தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள மேற்குறிப்பிட்ட வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பணி யிங்களுக்கு தகுதி உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 15.02.2023 -க்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Notification Click here