திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பாளையங்கோட்டை,திருநெல்வேலி
சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், செங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, சிவகிரி மற்றும் ராதாபுரம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்ட பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார் தொண்டர்களாக பணியாற்ற கீழ் குறிப்பிட்டு நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்
சமூகப் பணியில் முதுநிலை கல்வி பயிலும் மாணவர்கள்
அங்கன்வாடி பணியாளர்கள் / மருத்துவர்கள் உடல் நல நிபுணர்கள்
மாணவர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் அவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்யும் வரை
அரசியல் சார்பற்ற அரசு சாரா சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் சங்க பிரமுகர்கள்
மகளிர் குழுக்கள், மைத்ரி சங்கங்கள் மற்றும் வறியோரை உள்ளடக்கிய சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள்
மாவட்ட /வட்ட சட்டப் பணிகள் தன்னார் சட்டப்பணியாளர் பணிக்கு பொருத்தமாக கருதும் நபர்கள்
கல்வித்தகுதி : பள்ளி இறுதி வகுப்பில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், புரிந்துணர்வு திறன் உடையவராகவும் இருக்க வேண்டும்.
கணினி மூலம் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழி தட்டச்சு தெரிந்திருத்தல் அவசியம்.
வயது 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
மதிப்பூதியம் நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்
விண்ணப்பிக்க கடைசி நாள் 15.5.2024 மாலை 5:30 மணி
பணிக்காலம் தேர்வு செய்யப்படும் நாளில் இருந்து ஓர் ஆண்டு
விருப்பம் உள்ளவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை நிரப்பி பதிவு தபாலில் கீழே கண்ட முகவரிக்கு 15.05.2024 அன்று அல்லது அதற்கு முன்பாக கிடைக்கப்பெறுமாறு அனுப்ப கோரப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் அவர்களின் மின்னஞ்சலை விண்ணப்ப படிவத்தில் கண்டிப்பாக தெளிவாக தெரியப்படுத்த வேண்டும். விண்ணப்பதாரரின் நேர்காணல் தேர்வு குறித்த அறிவிப்பு மின்னஞ்சல் மூலமாக மட்டுமே தகவல் வழங்கப்படும். நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ நேர்காணல் அழைப்பு வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
தலைவர் /முதன்மை மாவட்ட நீதிபதி
திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
பாளையங்கோட்டை
திருநெல்வேலி-627 002.