தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024
மதுரை மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் தற்காலிக பணியிடமான மாவட்ட வள பயிற்றுநர் ( பண்ணை சாரா & பண்ணை ) பணியிடத்திற்கு கீழ்கண்ட தகுதியுடன் உள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள் :-பண்ணை சாரா
ஊரக வளர்ச்சி /சமூகப் பணி /பண்ணை சாராத வாழ்வாதார வணிக மேலாண்மை தொடர்பான பட்டய படிப்பு
வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பின் விரும்பத்தக்கது.
சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் முதல் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வாய்மொழி மற்றும் எழுத்து திறன் பெற்று இருக்க வேண்டும்.
கணினி இயக்கத்தில் போதுமான திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
மதிப்பூதியம் குறைந்தபட்சம் 20 ஆயிரம் முதல் அதிகபட்சம் 35 ஆயிரம் பணி திறனுக்கு ஏற்ப வழங்கப்படும்.
தகுதிகள் :-பண்ணை
வேளாண்மை / கால்நடை பராமரிப்பு /தோட்டக்கலை தொடர்பான பட்டய படிப்பு
வணிக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருப்பின் விரும்பத்தக்கது.
சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் முதல் 10 வருடங்களுக்கு மேல் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் வாய்மொழி மற்றும் எழுத்து திறன் பெற்று இருக்க வேண்டும்.
கணினி இயக்கத்தில் போதுமான திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
மதிப்பூதியம் குறைந்தபட்சம் 20 ஆயிரம் முதல் அதிகபட்சம் 35 ஆயிரம் பணி திறனுக்கு ஏற்ப வழங்கப்படும்.
திட்ட இயக்குநர்/ இணை இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மதுரை என்ற முகவரிக்கு 10/9/2024 பிற்பகல் 3 மணிக்குள் விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப தெரிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
TNSRLM – Madurai – DRP Non Farm | TNSRLM Madurai – District Resource Person – DRP Non Farm – Temporary Vacancy | 02/09/2024 | 10/09/2024 | View (244 KB) Application (31 KB) |
TNSRLM – District Resource Person – DRP Farm | TNSRLM – District Resource Person – DRP Farm – Temporary Vacancy | 02/09/2024 | 10/09/2024 | View (250 KB) Application (30 KB) |