TN Textiles Department Recruitment 2024 | Commissionerate of Textiles Chennai Recruitment 2024

தமிழ்நாடு அரசு துணி நூல் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024

துணி நூல் துறை ஆணையரகம் 34, கதீட்ரல் கார்டன் சாலை, சென்னை-34

ஊர்தி ஓட்டுநர் பதவிக்கான அறிவிக்கை

சென்னை துணி நூல் துறை ஆணையரகத்தில் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் பணியிடங்களை நியமன அலுவலர்/ துணி நூல் துறை ஆணையரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.9.2024 அன்று மாலை 5:45 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர் : ஊர்தி ஓட்டுநர்

காலியிடம்: ஒன்று

சம்பளம் ரூ.19500-71900/-

குறைந்தபட்ச வயது 1.9.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது 34 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது.

கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம் செல்லத்தக்க இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். அரசு துறை அல்லது அரசு பொதுத்துறை நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் : https://tntextiles.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கவும்.

The recruitment for the Driver post in the Commissionerate of Textiles, Chennai
by the Competent Authority. Applications are invited from eligible persons till
05.45 PM on 10.09.2024. Download Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *