Animal Husbandry- AHA Interview – Notification 2024

Animal Husbandry- AHA Interview – Notification

 PUBLISH DATE : 27/01/2024

செ.வெ.எண்:-52/2024

நாள்:-22.01.2024

திண்டுக்கல் மாவட்டம்

கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கான நேர்காணல் தேர்வு திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29.01.2024 முதல் 03.02.2024 வரை நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையில் காலியாக உள்ள கால்நடை பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் தேர்வு திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 29.01.2024 முதல் 03.02.2024 வரை தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு நேர்காணலில் கலந்து கொள்வதற்கான நேர்முக அழைப்பாணை தனியே அஞ்சலில் அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், அழைப்பாணையில் குறிப்பிட்டுள்ள நாளில், அழைப்பாணை கடிதத்துடன் அனைத்து அசல் சான்றுகளுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பாணை கிடைக்கக்பெறவில்லை எனில் அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை, மண்டல இணை இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் சென்று அழைப்பாணை நகலை 02.02.2024 மாலை 5.00 மணிக்குள் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

https://dindigul.nic.in/animal-husbandry-aha-interview/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *