தமிழ்நாடு அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் அலுவலக உதவியாளர் மற்றும் சமையலர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் நாமக்கல்
அர்ச்சகர் பயிற்சி பள்ளி வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ் ஆசிரியர்-01
சம்பளம் ரூ.20600 -65500
தமிழில் முதுகலை பட்டம் மற்றும் B.T or B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஏதேனும் மேல்நிலைப் பள்ளியில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழ் ஆசிரியராக பணி புரிந்திருக்க வேண்டும்.
தத்துவம், சமயம் மற்றும் பண்பாட்டில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் விண்ணப்பதாரருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஆகம ஆசிரியர்-1
சம்பளம் ரூ.20600 -65500
ஏதேனும் ஒரு வேத ஆகம பாடசாலையில் ஆசிரியராக ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு திருக்கோயிலில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் முதுநிலை அர்ச்சகராக பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வைணவ ஆகமத்தில் தற்போதுள்ள வேத ஆகம பாடசாலையில் நான்கு ஆண்டு படிப்பிற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
விடுதிக்காப்பாளர்-01
சம்பளம் ரூ.20600 -65500
ஏதேனும் ஒரு இளங்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்(பள்ளி )-01
சம்பளம் ரூ.11600-36800
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்(விடுதி)-01
சம்பளம் ரூ.11600-36800
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சமையலர் -01
சம்பளம் ரூ.11600-36800
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சமையலர் -01
சம்பளம் ரூ.11600-36800
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
உணவு தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்.
தூய்மை பணியாளர்-01
சம்பளம் ரூ.11600-36800
தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.7.2023 அன்று உள்ளவாறு 18 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 30.8.2023
விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டிய முகவரி:-
உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல்-– 637001
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
விண்ணப்ப படிவம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது திருக்கோயில் www.namakkalanjaneyar.hrce.tn.gov.in இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
https://namakkalanjaneyar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php