அரசினர் கூர்நோக்கு இல்லம் மதுரை வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023
சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் மதுரை அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய 31.5.2023 அன்று மாலை 5:30 மணிக்குள் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பம் மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ் உடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பதவியின் பெயர் : சமையலர்
பணியிடங்களின் எண்ணிக்கை: ஒன்று
தகுதிகள் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு : 30 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
தொகுப்பூதியம் மாதம் 16500 ரூபாய்
நிபந்தனைகள்:-
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
கண்காணிப்பாளர்,
அரசினர் கூர்நோக்கு இல்லம்,
சமூக பாதுகாப்புத்துறை,
164, சந்தைப்பேட்டை,
காமராஜர் சாலை,
மதுரை-625 009.
Notification click here
Application click here