தமிழ்நாடு அரசு, பொருள் இயல் மற்றும் புள்ளியியல் துறை,
திருநெல்வேலி மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள நிரந்தர முழுநேர காவலர் பதவிக்கு கீழே குறிப்பிட்ட இனச் சுழற்சி முறை அடிப்படையில் நேரடி பணி நியமனம் செய்யப்பட உள்ளது.
எனவே மாவட்டத்திற்கு உட்பட்ட தகுதியான ஆண், பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்
நிரந்தர முழுநேர காவலர்
இன சுழற்சி முறை
பழங்குடியினர் -முன்னுரிமை பெற்றவர்
அடிப்படை ஊதியம்
Rs.15700-50000
கல்வித் தகுதி:
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள்
வயது வரம்பு
1.1.2023 அன்று உள்ளவாறு பழங்குடியினர் 18க்கு மேல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை
நேர்காணல்
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தனித்தாளில் விண்ணப்பதாரரின் பெயர் ,தகப்பனார் பெயர், பிறந்த தேதி ,வயது, கல்வித் தகுதி, சாதி, நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி, முன்னுரிமை சான்று, இருப்பிட சான்றிதழ், மற்றும் இரண்டு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட நன்னடத்தை சான்றுடன் இணைத்தும் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான தனியாக விண்ணப்பங்களோ படிவங்களோ அங்கீகரிக்கப்படவில்லை.
உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும், முன்னுரிமை அற்றவர் விண்ணப்பித்தால் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
விண்ணப்பங்கள் கீழ் காணும் முகவரிக்கு தபால் மூலமாக 30.3.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
காலதாமதமாக கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நேர்காணல் தேதி விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட புள்ளியியல் அலுவலகம், மண்டல போக்குவரத்து அலுவலகம் பின்புறம்,என் ஜி ஓ பி காலனி,ஜவஹர் நகர் , திருநெல்வேலி -7.
Notification Click here