தமிழ்நாடு அரசு, மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தஞ்சாவூர்.
நேரடி நியமனம் மூலம் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்புவதற்கான விளம்பர அறிவிப்பு.
தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் காலியாக உள்ள இரண்டு அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்பும் பொருட்டு கீழ்கண்ட தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
காலியிடங்கள் : இரண்டு
ஊதியம் ரூ.15700-50000
கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு 1.7.2022 அன்று உள்ளபடி
குறைந்தபட்ச வயது : 18
அதிகபட்ச வயது
GT : 32
BC/BCM/MBC/DNC : 34
SC/ST/SCA : 37
விண்ணப்பதாரர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் நேரடியாக அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 6.3.2023 முதல் 21.3.2023 மாலை 5:45 மணிக்குள் உதவி இயக்குநர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், மணிமண்டபம் எதிரில், தஞ்சாவூர் என்ற முகவரியில் உரிய ஆவணனுடன் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
Notification Click here