ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு.
தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு காலியாக உள்ள மாவட்ட வள வல்லுநர் ( பண்ணை சார் தொழில் ) பணியிடத்திற்கு ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்யும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 10.01.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : மாவட்ட வள வல்லுநர் ( பண்ணை சார் தொழில்)
முன் அனுபவம் அடிப்படையில் மதிப்பூதியம்
பத்து வருடங்கள் அல்லது அதற்கு மேல் : Rs.3500 நாள் ஒன்றுக்கு
ஆறு வருடம் முதல் எட்டு வருடம் வரை : Rs.2500 நாள் ஒன்றுக்கு
இரண்டு வருடம் முதல் ஆறு வருடம் வரை : Rs.2000 நாள் ஒன்றுக்கு
பணிபுரிய வேண்டிய நாட்கள் 15 நாட்கள்
வயது : இருபத்தி நான்கு வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்
மொத்த பணியிடம் : ஒன்று
இளங்கலை பட்டப் படிப்பு : Agriculture/ Veterinary Science / Horticulture
முதுகலை பட்டப் படிப்பு : Business Administration
அனுபவம் சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் அதிகபட்சம் 10 வருடங்கள்
முகவரி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்டவர்கள்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை/ திட்ட இயக்குநர் ,மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10 மணி முதல் 5.45 மணி வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , இரண்டாவது தளம், கோரம்பள்ளம் 628101 ,தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ 10.01.2023 அன்று மாலை ஐந்து நாற்பத்தி ஐந்து மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
Notification Click here