TN GOVT Sanitary Worker Recruitment 2022

கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் காலியாக உள்ள 5 பகுதிநேர தூய்மைப் பணியாளர் ( ஆண் ), 3 பகுதிநேர தூய்மைப் பணியாளர் ( பெண் ) மாதம் ரூபாய் 3000 என்ற தொகுப்பூதியத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

மேற்படி காலிப்பணியிடங்கள் நேர்காணல் மூலம் இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ( முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின்படி அனுமதிக்கப்பட்டவாறு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்கள் இணைத்து சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒட்டி அதனை சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் 30.5.2022 -க்குள் விண்ணப்பிக்கலாம்.

Official Notification Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *