Arulmigu Ramanathaswamy Temple Rameswaram Recruitment 2022

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம் , இராமநாதபுரம் மாவட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேசுவரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள தட்டச்சர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்வதற்கு உரிய தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Typist : 02 Posts

(1) A pass in SSLC or its equivalent qualification recognized by the Government; and
(2)A pass in the Government Technical
Examination in Typewriting:
(i) Higher Grade in Tamil and English (or)
(ii) Higher Grade in Tamil and Lower Grade in English (or)
(iii) Higher Grade in English and Lower Grade in Tamil.
Provided that if the candidates with qualifications referred in item (i) are not available, candidates with the qualifications referred to in item (ii) or (iii)in the order of preference above may be appointed/
(3)A pass in the Certificate Course in Computer Application and
Office Automation or equivalent recognized by the Government

Salary Rs. Level -22 18500-58600

Application Fee : Nil

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.02.2022 மாலை 5 மணிக்குள்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :-

இணை ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில்,

ராமேசுவரம் நகர் மற்றும் வட்டம்,

இராமநாதபுரம் மாவட்டம் – 623 526.

வயது வரம்பு 1.2.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

இந்து மதத்தை சார்ந்தவராக, இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.

தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு நடத்தப்படும்.

இத்திருக்கோயில் ஆகம விதிகளின் படியும் நடைமுறை பழக்க வழக்கத்தின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.

விண்ணப்பத்துடன் கல்வி தகுதி சான்றிதழ் மற்றும் பிற ஆவணங்கள் சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

அசல் சான்றிதழை எக்காரணம் கொண்டும் அனுப்பக்கூடாது.

விண்ணப்பதாரர் அவர் வசிக்கும் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்ற சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்பும் போது மேல் உறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவு தபாலில் ஒப்புதல் அட்டையுடன் மட்டுமே அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பங்களை அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரிலோ அல்லது https://rameswaramramanathar.hrce.tn.gov.in/ என்கிற இணையதள முகவரியில் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேசுவரம்- 623 526, இராமநாதபுரம் மாவட்டம்

Arulmigu Ramanathaswamy Temple Rameswaram Recruitment 2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *