அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியீடு!
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் : நவம்பர் 18-ல் நடக்கிறது.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் : கூட்ஸ்ஷெட் ரோடு, கோவை தலைமை அஞ்சல் நிலையம், கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடக்கிறது.
வயது வரம்பு : 18 – 50 வயதுக்கு உட்பட்ட, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், 65 வயதுக்கு உட்பட்ட மத்திய, மாநில அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள், அதிகாரிகளும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன், நவம்பர் 18 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு தலைமை அஞ்சல் நிலையம் நேரில் வர வேண்டும்.விண்ணப்பங்களை அனைத்து அஞ்சல் நிலையங்களில் இலவசமாகவும், [email protected] என்ற இ -மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்புவதன் மூலமும் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.