PURATCHI THALAIVAR  MGR – NUTRITIOUS MEAL PROGRAMME Recruitment 2025 | Office Assistant | Data Entry Operator and  Computer Assistant

தென்காசி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சத்துணவு பிரிவு அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு அலுவலக உதவியாளர் பணி/தகவல் தொகுப்பாளர் கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் ஆகிய இரண்டு பணிடங்களுக்கு கீழ்காணும் தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 8000 மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படும்.

தகுதிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

2. தகவல் தொகுப்பாளர் கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் பணியிடத்திற்கு மாதம் ரூபாய் 15000 மட்டுமே தொகுப்பூதியம் வழங்கப்படும்.

கல்வித் தகுதிகள்: அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும், கணினியில் எம்.எஸ் ஆபீஸ் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும், குறைந்தபட்சம் கீழ்நிலை தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணியிடம் தொகுப்பூதிய அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானதாகும்.

இப்பணியிடம் 11 மாத காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு பணி நியமனம் செய்பவருக்குரிய அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகும் அவரே தகுதியான ஆட்களை உரிய முறையில் (நேர்முகத் தேர்வு) தேர்வு செய்வார்.

தகவல் தொகுப்பாளர் கணினி அனுபவத்துடன் கூடிய உதவியாளர் பணியிடத்திற்கு பணி நியமனம் செய்பவருக்குரிய அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகும் அவரே தகுதியான ஆட்களை உரிய முறையில் (எழுத்து தேர்வு/நேர்முகத் தேர்வு) தேர்வு செய்வார்.

வட்டார அலுவலகங்களில் உடன் பணிபுரியும் வகையில் இப்பணி இடங்கள் நிரப்பப்படும்.

பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களிடமிருந்து ரூபாய் 200-க்கான முத்திரைத்தாளில் ஒப்பந்த பணி பத்திரம் பெறப்படும்.

பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும்.

ஒவ்வொரு 11 மாத காலம் முடிவுக்கு பின் இடைவெளி விட்டு பணியிடம் புதுப்பிக்கப்படும்.

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எவ்விதமான முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ இயலாது.

இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

தமிழ்நாடு அரசு அலுவலரின் விதிமுறைகள் பொருந்தாது.

விண்ணப்பதாரர்கள் 1.1.2025 அன்று 21 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் https://tenkasi.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அஞ்சல் வாயிலாக மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 15.02.2025 மாலை 5 மணி

விண்ணப்பம் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட ஆட்சித் தலைவர்,

சத்துணவு பிரிவு அலுவலகம்,

தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம்,

தென்காசி-627 811.

ஆட்சோ்ப்பு 2025

தலைப்புவிவரம்தொடக்க தேதிகடைசி தேதிகோப்பு
அலுவலக உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புஅலுவலக உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு31/01/202515/02/2025பார்க்க (664 KB) 
தகவல் தொகுப்பாளர் & கணினி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்புதகவல் தொகுப்பாளர் & கணினி உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு31/01/202515/02/2025பார்க்க (754 KB) 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *