மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம், திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இயங்கி வரும் லால்குடி, மணப்பாறை, துறையூர், முசிறி, ஸ்ரீரங்கம், தொட்டியம் ஆகிய வட்ட சட்ட பணிகள் குழுவிற்கு சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பாமர மக்களுக்கு எடுத்துரைப்பதற்காக மொத்தம் 50 Para Legal Volunteers தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
மேற்படி இப்பணி சட்ட தன்னார்வலர்களுக்கான கடமை மற்றும் சேவை மட்டுமே. இது நிரந்தர பணிக்கானது அல்ல, முற்றிலும் தற்காலிகமானது மற்றும் அதற்கு அடிப்படை சம்பளம் அல்லது ஊதியம் எதுவும் இல்லை.
சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் அளிக்கப்படும் மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களுக்கு கீழ்கண்ட பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆசிரியர்கள் (ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் உட்பட)
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள்
MSW பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள்
அங்கன்வாடி பணியாளர்கள்
மருத்துவர்கள்
சட்ட கல்லூரி மாணவர்கள்
சமூக சேவை செய்யும் சமூக ஆர்வலர்கள்
மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் சமூகத் தொண்டு புரியும் மகளிர் குழுக்கள்
திருநங்கைகள்
அடிப்படை கல்வித் தகுதி (கணினி அறிவுடன்) உடைய சேவை மனப்பான்மை உள்ளவர்கள்
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப் பணிகள் குழுவில் பணிபுரிகின்ற தன்னார்வ சட்ட பணியாளர்கள் பணிக்கு பொருத்தமாக கருதும் நபர்
மேற்கண்ட பிரிவினர்கள் Para Legal Volunteers பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பங்களை https://tiruchirappalli.dcourts.gov.in/notice-category/recruitments/ என்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட நீதிமன்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் 10.7.2024 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
Notification for the selection of Para Legal Volunteers, Tiruchirappalli. | Notification PLV Tiruchirappalli Dt 25-06-2024 | 25/06/2024 | 10/07/2024 | View (1 MB) |