கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களாக பணியாற்றுவதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆங்கிலம்- இரண்டு, கணிதம் ,அறிவியல் ,சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் தலா ஒன்று என மொத்தம் ஐந்து காலிப் பணியிடங்கள் உள்ளன.
இடைநிலை ஆசிரியர் நிலையில் 22 காலிப் பணியிடங்களும் உள்ளன.
பட்டதாரி ஆசிரியர்களில் மாதம் ரூபாய் 15,000/-
இடைநிலை ஆசிரியர் மாதம் ரூபாய் 12000/-
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற்று, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்களிடமிருந்து இருந்து எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித் தகுதி சான்றுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலரிடம் செப்டம்பர்-5 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
Notification Click here