TNSRLM Recruitment 2023
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை,தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் விவரங்களை https://sivaganga.nic.in/notice/recruitment-for-block-coordinator-and-block-manager-in-tn-rural-livelihood-mission-sivaganga-district/ என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க விரும்புவோர் 11.07.2023 தேதி வரை மாலை 5.45 மணிக்குள் இணை இயக்குநர் /திட்ட இயக்குநர்,,தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி துறை அலுவலக வளாகம்,சிவகங்கை -630562 முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும்.
வட்டார இயக்க மேலாளர்கள்- நியமனத்திற்கான தகுதிகள்:-
திருப்புவனம்-01
ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் ஆறு மாதம் எம்எஸ் ஆபீஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சிவகங்கை மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்ச 3 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் – நியமனத்திற்கான தகுதிகள்:
காளையார்கோவில் -01
திருப்பத்தூர் -02
சாக்கோட்டை -01
இளையான்குடி -02
சிவகங்கை -01
ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கணினி இயக்கத்தில் மூன்று மாதம் எம்எஸ் ஆபீஸ் சான்று பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டில் பட்டதாரி சான்று பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்சம் வயது 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சொந்த வட்டாரத்தில் வசிப்பராக இருக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான பணிகளை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
Notice View