TN GOVT Gummidipoondi Taluk office Jobs 2022

தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது .

கிராம உதவியாளர் பணி ( Village assistant )

கல்வித்தகுதி :

5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காலியிடங்கள் : 14

சம்பளம் ரூ .11100-35100

Village assistant post age limit

வயது வரம்பு : 1.1.2022 அன்று உள்ளபடி

BC/BCM/MBC/DNC/SC/ST/SCA : 21-37 Years

OC : 21-32 Years

Note : அரசு பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பினை 2 ஆண்டுகள் உயர்த்தி அரசாணை (நிலை) எண் 91, மனிதவள மேலாண்மை(எஸ் ) துறை நாள் 13.9.2021-ன் படி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கும்மிடிப்பூண்டி வட்டத்தினை சேர்ந்தவர்களாகவும் அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவராக இருக்க வேண்டும். காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அக்கிராம பணியிடத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராம பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மிதி வண்டி ஓட்ட தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 20.1.2022 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரம், கல்வித்தகுதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் , இருப்பிட சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பக பதிவு விவரம் ஆகியவற்றின் நகல்களுடன் சுய விலாசம் எழுதப்பட்ட ரூபாய் 25 -க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட 25 X 10 செ.மீ அளவுள்ள உறை ஆகியவற்றுடன் விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 20.1.2022 மாலை 5.45 மணிக்குள் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கிடைக்க தக்க வகையில் அனுப்பி வைத்திட வேண்டும்

விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Applications invited for the Post of Village Assistants by Gummidipoondi Tahsildar Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *