திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மற்றும் வட்டம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்காணும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 1.7.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதிற்கு உட்பட்டவராகவும் தகுதியுடைய இந்து மதத்தை சேர்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.







விண்ணப்ப படிவம் தகுதிகள் மற்றும் இதர விவரங்களை www.hrce.tn.gov.in மற்றும் www.palanimurugan.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை உரிய தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ / தபால் மூலமாகவோ 5.12.2024 ஆம் தேதி முதல் 8.1.2025 ஆம் தேதி வரை மாலை 5:45 மணிக்குள் திருக்கோயில் அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:-
இணை ஆணையர் /செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்,
பழனி – 624 601.
திண்டுக்கல் மாவட்டம்.