திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலுடன் இணைந்த கருப்பண்ண பிள்ளை கட்டளையில் கீழ்குறிப்பிட்ட காலி பணியிடத்திற்கு இந்து மதத்தை சார்ந்த தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளின்படி பணி நியமனம் செய்ய 7.9.2024 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் : எழுத்தர் ( Clerk )
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கான இணையான கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
சம்பளம் Pay matrix – 11 (10700 – 33700)
காலியிடம் : ஒன்று
விண்ணப்பதாரர் 1.7.2024-ஆம் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதராகவும் இருத்தல் வேண்டும்.
இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
இவ்விளம்பரம் செய்யப்பட்ட தேதிக்குப் பிறகு உரிய காலத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றிதழ்கள் மற்றும் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களுக்கு அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர் வயதிற்கான சான்று ஆவணம் அல்லது கல்வி நிலையத்தால் வழங்கப்பட்ட மாற்று சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்.
பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர் பணியில் சேர வரும் நேரத்தில் விண்ணப்பதாரர் வசிக்கும் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் விண்ணப்பதாரர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதுமில்லை என்ற சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ்களின் அசல் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பும்போது மேல் உறையின் மீது பதவியின் பெயரை குறிப்பிட்டு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கு எவ்வித பயணம் படியும் வழங்கப்பட மாட்டாது.
விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் கல்வி தகுதி மற்றும் பிற தகுதிக்குரிய ஆவணங்களின் அசல் சான்றிதழ்கள் நேர்முகத் தேர்வின் போது கண்டிப்பாக கொண்டு வரப்பட வேண்டும்.
தேர்வு முறையானது அனுபவம்,செயல்முறை தேர்வுகள், கூடுதல் தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் நடைபெறும்.
விண்ணப்ப படிவத்தினை www.hrce.tn.gov.in மற்றும் www.thiruvanaikavaljambukeswarar.hrce.tn.gov.in என்ற திருக்கோயில் இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூபாய். 50 செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்திசெய்யபட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில் எழுத்தர் பணியிடத்திற்கான விண்ணப்பம் என தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர் /செயல் அலுவலர்,கருப்பண்ண பிள்ளை கட்டளை, அருள்மிகு ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில், திருவானைக்காவல், திருவரங்கம் வட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டம்-620005 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூபாய். 25 மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுயவிலாசமிட்ட ஒப்புகை அட்டை உடனும் அஞ்சல் உறையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 7.9.2024 பிற்பகல் 5 மணிக்குள்
https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/186/document_1.pdf