மதுரை மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்கம் மேலாண்மை அலகு, அலுவலகத்தில் உள்ள கீழ்க்கண்ட காலி பணியிடங்களில் ஒப்பந்த முறையில் வெளி கொணர்வு மனித வள நிறுவனங்கள் (Outsourcing – HR Agency) மூலம் பணி அமர்வு செய்திட தகுதியான பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிட விவரம்:-
உள்ளாட்சி அமைப்பு : மதுரை மாநகராட்சி
பதவியின் பெயர்: சமுதாய அமைப்பாளர்
காலி பணியிடம் எண்ணிக்கை: 5
சமுதாய அமைப்பாளர் பணியிடத்திற்கான தகுதிகள்:
வயது 30.8.2024 தேதியன்று 35 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மற்றும் கணினி இயக்கத்தில் அடிப்படை தகுதிகள் (MS Office) பெற்று இருக்க வேண்டும்.
தகவல் தொடர்பில் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ALF Member
இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
ஊதியம் ரூபாய் 16,000
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மனித வள நிறுவனங்களான (HR Agency) தங்கள் பகுதிக்கு சம்பந்தப்பட்ட நகர வாழ்வாதார மையங்கள் மற்றும் மக்கள் கற்றல் மையம் அலுவலகத்தில் 30.8.2024 தேதி மாலை 5:45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும்.
TNULM – Community Organizer
Title | Description | Start Date | End Date | File |
---|---|---|---|---|
TNULM – Community Organizer | Vacancy of Community Organizer in Madurai Tamilnadu Urban Livelihood Mission – Consolidated Pay | 20/08/2024 | 30/08/2024 | View (116 KB) Applform (51 KB) |