தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, கந்தகோட்டம் ஸ்ரீ கந்தசுவாமி கோயில் என வழங்கும் ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு 2024
சென்னை -3, பூங்கா நகர், ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானத்தில் கீழ்கண்ட விவரப்படியான காலி பணியிடங்களுக்கு தக்கார் தீர்மானத்தின்படி பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதி உள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடமிருந்து 2.8.2024 ஆம் தேதி மாலை 5 45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
2024 ஜூலை 1 அன்று 18 வயது பூர்த்தியானவராகவும் 45 வயது பூர்த்தி அடையாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இதர விவரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் வந்து தெரிந்து கொள்ள வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் அல்லது https://hrce.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் முத்துக்குமாரசுவாமி தேவஸ்தானம் என்கிற பெயரில் உள்ள பக்கத்தில் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
படிவங்களை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களை அரசு பதிவு பெற்ற அலுவலரின் சான்றொப்பத்துடன் இணைத்து விண்ணப்பங்களை செயல் அலுவலர், ஸ்ரீ முத்து குமாரசுவாமி தேவஸ்தானம், எண் . 44 ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை- 3 என்ற முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=388
ஓதுவார் பணியிடம் வேலை வாய்ப்பு அறிவிப்பு
பரிசாரகர் பணியாடத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு
சுயம்பாகி பணியிடம் வேலை வாய்ப்பு அறிவிப்பு