அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி வேலை வாய்ப்பு அறிவிப்பு 2023
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, பழனி( தன்னாட்சி), தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனம்.
கீழ்காணும் அரசு உதவி பெறும் ஆசிரியரல்லா பணியிடங்களுக்கு தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :-
இளநிலை உதவியாளர்-03
தட்டச்சர்-01
பண்டகக்காப்பாளர்-01
ஆய்வக உதவியாளர்-06
பதிவறை எழுத்தர் -02
நூலக உதவியாளர்-01
அலுவலக உதவியாளர்-02
ஊதிய விகிதம் : தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்துள்ள ஊதிய விதிகளின்படி
கல்வித் தகுதி
தட்டச்சர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தட்டச்சில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மேல்நிலைத் தேர்ச்சி, தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வித்துறை நடத்தும் ஆபீஸ் ஆட்டோமேஷன் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
இளநிலை உதவியாளர், ஆய்வக உதவியாளர், பண்டாக காப்பாளர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதிவறை எழுத்தர், நூலக உதவியாளர் : பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு : தமிழ்நாடு அரசு விதிகளின்படி
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் தங்களது கல்வி சான்றிதழ், தொழில்நுட்ப கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ்களின் சான்றொப்பம் பெற்ற நகல்கள் மற்றும் பணியில் முன் அனுபவம் பெற்றிருப்பின் அதன் நகல் ஆகியவற்றுடன் செயலர், அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, சின்னக் கலையம்புத்தூர், பழனி, திண்டுக்கல் மாவட்டம் என்ற முகவரிக்கு அனுப்பும்படி தெரிவிக்கப்படுகிறது.
பெறப்படும் விண்ணப்பங்களை தகுதி உடைய நபர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 9.10.2023 மாலை 5 மணி வரை
NOTIFICATION CLICK HERE