TNHRCE Office Assistant Recruitment 2023
உதவி ஆணையர் அலுவலகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர் அலுவலகம் தர்மபுரி வேலைவாய்ப்பு விளம்பர அறிவிப்பு 2023
தர்மபுரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்துடன் ஏற்கனவே உள்ள மற்றும் புதியதாக ஏற்படுத்தப்பட்ட ஆய்வாளர்கள், சிறப்பு வட்டாட்சியர் பணியிடங்களுக்கு துணை பணியிடங்களாக ஏற்படுத்தப்பட்ட கீழ் காணும் அலுவலக உதவியாளர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வு முறை :
தகுதியுள்ள விண்ணப்பதாரருக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும்.
பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது.
பதவியின் பெயர்
பதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்
பணியிடம் : ஆய்வாளர்கள் அலுவலகம் மற்றும் தனி வட்டாட்சியர் இந்து சமய அறநிலையத்துறை தர்மபுரி மாவட்டம்
கல்வித்தகுதி
குறைந்தபட்ச கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
சம்பளம் : Rs .15700-50000/-
காலியிடங்கள்
மொத்த எண்ணிக்கை : 7
1.1.2023 அன்று உள்ளவாறு வயது வரம்பு:
GT-18-32
MBC/DNC/BC/BCM : 18-34
SC/ST/SCA : 18-37
விண்ணப்பிக்க கடைசி நாள்
11.03.2023
விண்ணப்பிக்கும் முறை
தகுதி உள்ள இந்து சமயத்தை சார்ந்தவர்கள் 11.3.2023 மாலை 5 30 மணிக்குள் கீழ்காணும் ஆவணங்களில் நகல்களில் சான்றிட்டும் புகைப்படத்துடன் சுய விலாசமிட்ட ரூபாய் 25 க்கான தபால் தலை ஒட்டிய கவர் ஒன்றுடன் கீழ் கண்ட முகவரிக்கு உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணைத்து அனுப்ப வேண்டிய விபரங்கள் :
விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
எட்டாம் வகுப்பு தேர்ச்சி -கல்வி சான்று நகல்
பள்ளி மாற்று சான்றிதழ் நகல்
சாதி சான்றிதழ் நகல்
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண் பதிவு சான்றின் நகல்
குடும்ப அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அடையாள அட்டை நகல்
முன்னுரிமைக்கான சான்றின் நகல்
இதர தகுதிகள் ஏதும் இருப்பின் அதன் விவரம் மற்றும் நகல்கள்
சுய விலாசம் இட்டு ரூபாய் 25 தபால் தலையுடன் கூடிய உரை ஒன்று
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
செங்குந்தர் திருமண மண்டப வளாகம்,
பென்னாகரம் ரோடு,
குமாரசாமி பேட்டை,
தர்மபுரி மாவட்டம்- 636 701
NOTIFICATION CLICK HERE